உலகப்புகழ் பெற்ற சீன பாடிபில்டர் வாங் குன் (30), எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். சீன பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 8 முறை பட்டம் வென்று சாதனை படைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான உடற்பயிற்சிகளையும், தீவிரமான உணவு முறைகளையும் (Diet) பின்பற்றி, உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் இதுபோன்று மாரடைப்பால் மரணமடைவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
