பூட்டிய வீட்டிற்குள் வீசிய துர்நாற்றம்… படுக்கையறையில் கணவன், குளியலறையில் கணவனின் சடலங்கள்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மன அழுத்தம் மற்றும் குடும்பப் தகராறு காரணமாக தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தூரின் லசுடியா காவல் எல்லைக்குட்பட்ட சாட்டிலைட் ஜங்ஷன் காலனியில் உள்ள ஒரு வீட்டில், கன்ஹையாலால் பரன்வால் மற்றும் அவரது மனைவி ஸ்மிருதி பரன்வால் ஆகியோர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கன்ஹையாலால் உடல் படுக்கையிலும், ஸ்மிருதியின் உடல் குளியலறையிலும் சிதைந்த நிலையில் காணப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், அவர்கள் உயிரிழந்து சுமார் 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

   
அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சினைகளே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடல்களைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மேலதிக விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். ஒரே அறையில் தம்பதியினர் சடலமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.