மருத்துவ உலகில் மனித உடல் மீட்பு தொடர்பான புதுமைகள் நாளுக்கு நாள் வியப்பூட்டும் வகையில் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சீனாவில் நடந்த ஒரு அபூர்வமான அறுவை சிகிச்சை சம்பவம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் ஹான்டாங் மாகாணத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் தொழிற்சாலையில் பணியாற்றிய போது ஏற்பட்ட விபத்தில் அவருடைய இறந்த காது முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் கடுமையாக சேதம் அடைந்ததால் உடனடியாக காதை அதன் இயல்பான இடத்தில் இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. துண்டிக்கப்பட்ட காதை வீணாக்காமல் பாதுகாப்பதற்கு யோசித்த மருத்துவர்கள் ஒரு வித்தியாசமான முறையை தேர்ந்தெடுத்தனர்.
ரத்த ஓட்டம் சீராக நடைபெறும் இடமாக கருதப்படும் அந்த பெண்ணின் காலின் மேல் பகுதியில் நுணுக்கமான அறுவை சிகிச்சை மூலமாக காதை தற்காலிகமாக இணைத்தனர். சுமார் பத்து மணி நேரம் நடைபெற்ற இந்த சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பிறகு காது வெற்றிகரமாக காலில் இணைக்கப்பட்டது. இந்த முறை மருத்துவத்தில் ஹெட்டரோடோபிக் சர்வைவல் என்று அழைக்கப்படுகின்றது. அடுத்த ஐந்து மாதங்கள் அந்த பெண் காதை பாதுகாப்பதற்காக தளர்வான சிறப்புகளை அணிந்து வந்தார். பிறகு இரண்டாவது கடினமான அறுவை சிகிச்சையின் மூலம் அந்த காதை அதன் இயல்பான இடத்தில் மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள். துண்டிக்கப்பட்ட உறுப்புகளை உடனடியாக இணைக்க முடியாத சூழ்நிலைகளில் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
