செம சூப்பர்..! விமானத்தை விட அதி வேகமான ரயில் அறிமுகம்… வெறும் 150 நிமிடங்களில் 1200 கி.மீ இலக்கை அடையும்..!!

By Soundarya on ஆடி 18, 2025

Spread the love

சீனாவில் அதிவேக ரயிலானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இந்த ரயில் பயணிக்கிறது.  இந்த ரயிலானது மாக்லேவ்  தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ரயில் ஓடும் பொழுது அதற்கு தண்டவாளத்தோடு எந்த தொடர்பும் இருக்காது. இந்த தொழில்நுட்பத்தால் உராய்வு ஏற்படாது. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்  இடையே 1200 km தூரம். இதற்கான பயண நேரம் 5.30 மணி நேரம் ஆகிறது. இந்த நிலையில் இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக ரயில் வெறும் 150 நிமிடங்களில் இலக்கை அடைகிறது.

2021 ஆம் வருடத்திற்குள் இதை ஐம்பதாயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்க சீனா இலக்கு வைத்துள்ளது. இந்த ரயிலில் அதிரவீன வசதிகள் உள்ளது. விசாலமான கேபின், பெரிய டிஜிட்டல் ஸ்கிரீன்கள் அமைந்துள்ளது. அதிவேகமான  இந்த ரயிலை சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன்(CRRC) வடிவமைத்துள்ளது. இந்த தொழில்நுட்பமானது மணிக்கு 620 மைல்களுக்கு மேல் வேகத்தை எட்டியது. இது ஒரு விமானத்தை விட வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.