9 வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட வாலிபர்… கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டிக்கொண்டு… பல கிலோ மீட்டர் நடந்து செல்வது ஏன்..? வியக்க வைக்கும் காரணம்..!!

By Soundarya on ஆடி 18, 2025

Spread the love

உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கேசவ். 25 வயதான இவர் பாபா சாமி அருளை பெறு வேண்டும் என்பதற்காக தன்னுடைய இடுப்பில் 12 இரும்பு சங்கிலிகளை கட்டிக்கொண்டு 18 கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு ராஜஸ்தானின் கதுஷ்யம் ஜி கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் பாபா ஷாமியை மகிழ்விப்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டதாக கூறியுள்ளார். திங்கள்கிழமை  நைனிடாலில் இருந்து ரயிலில் புறப்பட்ட கேசவ் செவ்வாய்க்கிழமை மதியம் ஷியான் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்துவிட்டு தன்னுடைய நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

சுமார் 24 மணி நேரம் பயணத்திற்கு பிறகு புதன்கிழமை மாலை 4 மணியளவில் கதுஷ்யம் ஜி கோவிலை அடைந்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் கை கால்களை சங்கிலியால் கட்டியுள்ளார். கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து இந்த கோவிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார். 9 வயதில் தன்னுடைய பெற்றோரால் கைப்பட விட்டு தனியாக வளர்ந்து வரும் இவர் பாபா ஷாமின் அருளால் நைனிடாலில் ஒரு குடிநீர் பாட்டில் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். பணமில்லாத போது சைக்கிளில் பயணம் செய்து வந்துள்ளார். தற்போது சங்கிலிகளால் கட்டி நடந்து பாபாவை சந்திப்பதாக கூறியுள்ளார்.