எலும்பு முறிவா..? இனி கவலை வேண்டாம்… ஆபரேஷன் இல்லாமல் “வெறும் 3 நிமிடத்தில் ஒட்டிவிடலாம்”… சீனாவின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!

By Soundarya on புரட்டாதி 15, 2025

Spread the love

ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதை மீண்டும் சரி செய்வதற்கு சில மாதங்கள் வரை ஆகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருடைய அன்றாட வாழ்க்கையானது பாதிக்கப்படும். இந்த நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டால் இனி அறுவை சிகிச்சைக்கு பதிலாக மூன்று நிமிடத்தில் அதை ஒட்டி சரி செய்யும் பசயை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள்.

Bonc 02 என்று அழைக்கப்படும் இந்த பசையானது இரத்தம் இருந்தால் கூட மூன்று நிமிடத்தில் இரண்டு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும். 150 பேருக்கு நடந்த இந்த சோதனை வெற்றியடைந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். இந்த பசை எலும்பு குணம் அடையும் போது இயற்கையாகவே உறிஞ்சப்படும் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று கூறுகிறார்கள்.