குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்காமல் இருப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக, குழந்தை பிறந்த 12 மாதங்களுக்குள் கட்டணமின்றி பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், அதற்குப் பிறகு 15 ஆண்டுகளுக்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெயரைப் பதிவு செய்யலாம் என்றும் விதிமுறை உள்ளது. தற்போது, பிறப்பு பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்களுக்காக, தமிழ்நாடு அரசு வரும் செப்டம்பர் 26, 2026 வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய ஆவணங்களுடன் தங்களது மண்டல அலுவலகங்களை அணுகிப் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
பெயர் சேர்க்க விரும்பும் பொதுமக்கள் பிறப்புச் சான்றிதழ் நகல், பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரை உள்ள மண்டல அலுவலகங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான முக்கிய ஆவணம் என்பதால், பெயர் பதிவு செய்யப்பட்ட சான்றிதழைப் பெறுவது அவசியம் என்று மாநகராட்சி ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். செப்டம்பர் 26, 2026-க்குப் பிறகு இந்த அவகாசம் முடிவடைவதால், அதற்கு முன்னதாகவே பணிகளை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி - ஹவுரா ரயில் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளின் போது திடீரென மண்…
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு அரசு தரப்பில் இரட்டிப்பு…
புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…