உங்க வீட்டு குழந்தைக்கு ஆதார் கார்டு இருக்கா?.. உடனே இதை செய்யாவிட்டால் ஆதார் கார்டு ரத்து.. UIDAI அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 16, 2025

Spread the love

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக பிறந்த குழந்தைக்கும் தற்போது பால் ஆதார் கார்டு எடுக்கப்படுகிறது.

இப்படியான நிலையில் 5 வயதிற்கு மேற்பட்ட சிறார் சிறுமிகளின் ஆதாரில் பயோமெட்ரிக்கை பதியும்படி UIDAI அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐந்து வயதிற்கு முன் ஆதார் பெறுகையில் கைவிரல், கருவிழி ரேகை பதியப்படாது. ஆதலால் 5 வயது நிறைவடைந்த பிறகு அதை பதிவு செய்வது கட்டாயம் என்று கூறியுள்ளது. ஐந்து முதல் ஏழு வயது வரை இதனை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை அப்படி பதியாவிட்டால் ஆதார் ரத்து செய்யப்படும் என்று UIDAI குறிப்பிட்டுள்ளது.