ஜாலியாக விளையாடிய குழந்தைகளை துரத்திய தெரு நாய்கள்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!

By Divyamayakannan on ஆவணி 23, 2025

Spread the love

டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் பிடித்து அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நாய்களின் ஆலோசகர்களும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள  பல  லட்சம் மக்களும்   இந்த தீர்ப்பை எதிர்த்தனர். பின்பு தெருநாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதியில் விடலாம் என்றும், ஆக்ரோஷமான மற்றும் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பலரும் வரவேற்றனர்.

சமீப நாட்களாக பல இடங்களில் தெருநாய்களின் கடியினால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கூட்டமாகத் தெரு நாய்கள் தாக்க வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து கேட்டை மூடிக்கொண்டதால் நாய்க்கடியிலிருந்து குழந்தைகள் தப்பினர். புத்திசாலித்தனமாக செயல்பட்டதனால் நூல் இலையில் நாய்களிடம் இருந்து தப்பித்தனர். இச்சம்பவம் குறித்து சிசிடிவி கேமரா வெளியாகி சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவி வருகிறது.