இன்றைய காலகட்டத்தில் எல்லோர் கையிலும் செல்போன் வந்துவிட்டது. செல்போன் இல்லாமல் அன்றைய பொழுதே ஓடாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். இதில் பெரும்பாலும் சிறுவர்கள் நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்றே சொல்லலாம். அதை சரிசெய்யும் விதமாக ஆஸ்திரேலியாவில் சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தடை டிச. 10 முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், ஆஸி., வழியில் மலேசியாவும் 2026 ஆம் வருடம் சிறுவர்களுக்கு இதே தடையை கொண்டு வர முடிவெடுத்திருப்பதாக அந்நாட்டு அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார். இணைய அச்சுறுத்தல்கள், மோசடிகள், ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
