தமிழகத்தில் சின்னம்மை (Chickenpox) பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் உடலில் தோன்றும் கொப்புளங்கள் முழுமையாகக் காய்ந்து உதிரும் வரை, சுமார் 10 நாட்களுக்கு அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திப் பராமரிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த வைரஸ் பரவலைத் தடுக்க இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை முறையாக மூடிக்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நோய் முழுமையாகக் குணமாகும் வரை குழந்தைகள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதன் மூலம் மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…