அச்சச்சோ… தேர்வு மையத்தில் கதறிய குழந்தை… சட்டென பாய்ந்து வந்து பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி காரியம்… பாராட்டும் நெட்டிசென்கள்…!

By Swetha on ஆவணி 3, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று 3,991 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தேர்வர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

பெங்களூரில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு இளம் தாய் ஒருவர், தன் சிறிய குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு அறைக்குள் குழந்தையை அழைத்துச் செல்ல அனுமதி இல்லாததாலும், தேர்வின் போது குழந்தையைப் பார்த்துக்கொள்ள யாருமன்றி அவர் தவித்ததாலும், செய்வதறியாது கவலையுடன் அங்கு நின்றுகொண்டிருந்தார்.

   

இதனைப் பார்த்த அங்கு பாதுகாப்பில் இருந்த பெண் போலீஸார், உடனடியாக அந்தத் தாய்க்கு உதவ முன்வந்தனர். தேர்வு மைய வளாகத்திலேயே ஒரு சேலையைக் கொண்டு தொட்டில் கட்டி, அழுதுகொண்டிருந்த குழந்தையை அதில் படுக்க வைத்துத் தாலாட்டினர். உடனே அவர்களிடம் தைரியமாக குழந்தையை ஒப்படைத்துவிட்டு, அந்த தாய் நிம்மதியுடன் தேர்வு எழுதச் சென்றார். பெண் போலீஸாரின் இந்த நெகிழ்ச்சியான செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.