கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவைச் சேர்ந்த சுதர்சன் – நவ்யா தம்பதியினரின் 7 மாத ஆண் குழந்தை சின்மயி, எதிர்பாராத விதமாக செம்பருத்திப் பூவின் காம்பை விழுங்கியதில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பூஜையறைக் கதவில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த செம்பருத்திப் பூக்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, திடீரென ஒரு பூவின் காம்புப் பகுதியை எடுத்து வாயில் வைத்து விழுங்கியுள்ளது.
குழந்தையின் தொண்டையில் பூவின் காம்பு சிக்கியதை அறிந்த தாய் நவ்யா, உடனடியாக குழந்தையை மீட்க முயன்றார். ஆனால், மூச்சு விட முடியாமல் குழந்தை திணறியதால், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுவாசக் குழாயில் செம்பருத்திப் பூவின் காம்பு சிக்கியிருப்பதை உறுதி செய்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தங்கள் கண் முன்னேயே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்ததைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. இச்சம்பவம் குறித்து உன்சூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…