ஐயோ நெஞ்சே பதறுது… ஒன்றரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய நிலக்கடலை… தாய்ப்பால் கொடுத்த அம்மா… நொடிப்பொழுதில் நடந்த துயரம்…!

By Nanthini on கார்த்திகை 2, 2025

Spread the love

கேரள மாநிலம் பட்டினம் திட்டம் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது கேரள மாநிலம் பத்தினம் திட்டம் பகுதியில் நிலக்கடலை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 10 மணியளவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் உணவு குழாயில் நிலக்கடலை சிக்கி இருந்ததை அறியாமல் தாய்ப்பால் கொடுத்த நிலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது. ஆரம்பத்தில் தாய்ப்பால் சிக்கியதாக நினைத்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை பிறகு தொண்டையில் நிலக்கடலை சிக்கி இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.