மெக்சிகோவில் பயங்கர தீ விபத்து….! குழந்தைகள் உள்பட 23 பேர் பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

அமெரிக்காவின் மெக்சிகோவில் ஹெர்மோசில்லோ நகரில் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 23 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 11 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் ஆறுதல் கூறியுள்ளார். தீ விபத்தில் ஏற்பட்ட நச்சுவாயுக்களை சுவாசித்ததால் இறப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.