மாணவர்களே ரூ.10,000 உதவித்தொகை வேண்டுமா..? இன்றே கடைசி நாள் உடனே கிளம்புங்க…!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று  ஆகும். ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்வில் பங்கேற்கத் தகுதியான மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பப் படிவத்தை www.dge.tn.gov.in என்ற அரசுத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் ஆயிரம் தகுதியான மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ரூ.10,000/- வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இது மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய திட்டமாகும்.