மாணவர்களுக்கு குஷியோ குஷி..! இலவச மடிக்கணினி வழங்கும் தேதி அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி…!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love
தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஜனவரி 5-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வழங்கித் தொடங்கி வைக்கிறார்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், டிஜிட்டல் கல்விக்கு ஊக்கமளிக்கவும் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.