#BREAKING : முதலமைச்சர் வேட்பாளர் விஜய் – தவெக கூட்டத்தில் தீர்மானம்…!!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக பொதுக்குழுக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. பொதுக்குழு தொடங்கிய உடன் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செய்தார். இதன்பின், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு விஜய் உள்ளிட்ட அனைத்து தவெக நிர்வாகிகளும் கண்ணீருடன் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் தலைவர் விஜயை  முன்மொழிந்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.