தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற 3-வது அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, லஞ்சம் மற்றும் ஊழல் விவகாரங்களில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான எச்சரிக்க விடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமூக நீதி ஆணையம் மற்றும் 8 தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அதிகாரிகளன்றி அமைச்சர்களுடன் தனியாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றங்களில் அமைச்சர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ தலையிடக் கூடாது எனக் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், அமைச்சர்களின் உதவியாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அமைச்சர்களே பொறுப்பேற்க நேரிடும் என்றும், உளவுத்துறை மூலம் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரித்துள்ளார். புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் துறைகள் உடனடியாக மாற்றப்படும் என்று முதல்வர் விஜய் எச்சரித்துள்ளது கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
