“விலையைக் கேட்டா மயக்கமே வந்துடும்” – மாற்றப்பட்ட முதல்வர் விஜய்யின் சொகுசு நாற்காலி… இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..?

By Swetha on ஆனி 10, 2026

Spread the love

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலக அறையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அமரும் நாற்காலி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நிர்வாக மற்றும் தனிப்பட்ட நடைமுறைகளில் மாற்றங்களைச் செய்து வரும் அவர், இதுவரை பயன்படுத்தி வந்த பாரம்பரிய மர நாற்காலியை மாற்றிவிட்டு, புதிய பிரீமியம் ரக நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

இந்த நாற்காலி மாற்றத்திற்கான முக்கியப் பின்னணியாக அவரது உடல்நலம் குறிப்பிடப்படுகிறது. முதல்வர் விஜய் தினமும் காலை 9:30 மணிக்கே தலைமைச் செயலகம் வந்துவிடுவதோடு, மதிய உணவிற்காகக்கூட வீட்டிற்குச் கூட செல்லாமல் மாலை 4:00 மணி வரை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவதால் அவருக்கு லேசான முதுகு வலி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

தற்போது அவரது அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய நாற்காலி, உடலுக்குத் தகுந்தாற்போல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன எர்கோனாமிக் வசதிகளுடன் கூடிய குஷன் நாற்காலி என்று கூறப்படுகிறது. சந்தையில் இதன் விலை சுமார் ரூ.55,000 முதல் ரூ.80,000 வரை இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.