“நாங்கள் செஞ்ச மைக், டேபிள்”…. எ.வ.வேலு சொன்ன ஒற்றை வார்த்தை… விழுந்து விழுந்து சிரித்த CM விஜய்… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரிடையே சுவாரசியமான காரசார விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின்’ பெயரை மாற்றி ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என விரிவாக்கம் செய்ததற்கு எ.வ.வேலு தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். புதிய திட்டங்களை உருவாக்கி காமராஜர் பெயரை வைக்கலாமே தவிர, ஏற்கனவே உள்ள திட்டத்தின் பெயரை மாற்றத் தேவையில்லை என்றும், காமராஜருக்குச் சிலை மற்றும் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்தது திமுகதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன, அரசுச் திட்டங்கள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்தில் செயல்படுத்தப்படுவதாகவும், காலங்காலமாக திமுக ஆட்சிக் காலத்திலும் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்ட வரலாறுகள் உண்டு என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்குப் பெருந்தலைவர் காமராஜரின் பெயரை விட மிகப்பொருத்தமான பெயர் வேறு எதுவும் இருக்க முடியாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

   

இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக எ.வ.வேலு, சட்டமன்றத்தில் இருக்கும் கலைநயமிக்க மேசைகளும் மைக்குகளும் பொதுப்பணித்துறை அமைச்சராகத் தாம் இரவு பகலாகப் பார்த்துச் செய்தவை என்று குறிப்பிட்டபோது, “அந்த டேபிள், மைக், நாற்காலி அனைத்தையும் செய்தது மக்கள் வரிப் பணத்தில் தமிழக அரசுதானே தவிரத் தனிநபர் அல்ல” என அமைச்சர் ராஜ்மோகன் சட்டென்று பதிலடி கொடுத்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற இந்தச் சுவாரசியமான வாக்குவாதத்தைக் கேட்டு அவையிலிருந்த முதலமைச்சர் விஜய் குலுங்கி குலுங்கிச் சிரித்தது சட்டமன்றத்தில் பேரவை உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது.