“நான் தாங்க MLA உள்ளே விடுங்க”…. சட்டப்பேரவை வாசலில் நடந்த சம்பவம்…  MLA பேச்சை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்…..!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு, அவையில் சுவாரசியமான உரையாடல்களையும் புன்னகையையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கார், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து பேசிய தவெக சட்டமன்ற உறுப்பினர் சண்முகம், “வழங்கப்படும் காரை இன்னோவா காராகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனப் பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதைக் கேட்டு முதல்வர், சபாநாயகர் உட்பட அவையில் இருந்த அனைவரும் சிரிப்பொலி எழுப்பினர்.

இதேபோன்று, பெரியகுளம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சபரி அயங்கரன் தனது கல்லூரிப் பருவ நினைவுகளையும் தற்போதைய சூழலையும் நகைச்சுவை தும்பப் பகிர்ந்து கொண்டார். “கல்லூரி காலத்தில் வேலையும் இல்லாமல் சொந்தமாகக் காரும் இல்லாமல் இருந்ததால் எனக்குக் காதல் தோல்வி ஏற்பட்டது; ஆனால் இப்போது எனது தலைவர் எனக்கு வேலையை வழங்கி இருக்கிறார், முதலமைச்சர் காரையும் வழங்கி இருக்கிறார்” என்று அவர் பேசினார். மேலும் தேனியிலிருந்து சென்னைக்கு ரயிலிலும் ஆட்டோவிலும் வந்து சென்ற தனது சிரமத்தை முதல்வரின் இந்த அறிவிப்பு முற்றிலும் போக்கியுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டது அவையில் இருந்த அனைவரையும் கவர்ந்தது.