அடிசக்க… இனி ஓசூர் ரேஞ்சே வேற…!ஆந்திராவுக்கு செக் வைத்த முதலமைச்சர் விஜய்…! திமுக போட்ட விதை… தவெக ஆட்சியில் மாஸ் அறுவடை…!

By Swetha on ஆடி 9, 2026

Spread the love

திமுக அரசு ஒசூரில் வான்வழி அமைப்புகளுக்கான மையத்தை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து தற்போது வெற்றிக்கண்டுள்ளது. ஏற்கனவே ஒசூரில் அமையவிருந்த இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நடுத்தர ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் விமான சோதனை மற்றும் வடிவமைப்பு மையம் கைநழுவி, ஆந்திர மாநிலத்தின் புட்டபர்த்திக்குச் சென்றது. இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையிலும், பாதுகாப்புத் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் ஏரோஸ்பேஸ் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையிலும் தவெக அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் காரணமாக, தற்போது இந்த சிஏபிஎஸ் மையம் ஒசூரை நோக்கி ஈர்க்கப்பட்டு, திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் , தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோவும் இணைந்து இந்த புதிய வான்வழி அமைப்பு மையத்தை உருவாக்க உள்ளன. இந்த மையத்தில் முக்கியமாக ராணுவத் தேவைகளுக்கான நவீன வான்வழி அமைப்புகள், கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் வான்வழி கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி, சோதனை மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான அதிநவீன உள்கட்டமைப்புகளைத் தமிழகத்தில் உருவாக்குவதே இந்த இரு அமைப்புகளின் கூட்டுப் பணியின் முக்கிய நோக்கமாகும்.

   

தற்போது ஓசூர் நகரம் ஒரு முன்னணி உற்பத்தி நகரமாகத் திகழ்ந்த போதிலும், அது பெரும்பாலும் ஆட்டோமொபைல், கனரகத் தொழிற்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவே அறியப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அமையவிருக்கும் இந்த உயர்தொழில்நுட்ப சிஏபிஎஸ் அமைப்பின் மூலம், ஓசூர் நகரம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனங்களுக்கான ஒரு புதிய மற்றும் பிரம்மாண்டமான அடையாளத்தைப் பெறவுள்ளது. இத்திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த டிட்கோ மற்றும் டிஆர்டிஓ ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தங்களின் பணிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளன.