அதிமுக “மாஜி”க்களுக்கு விழுந்த திடீர் அதிர்ச்சி வேட்டு.. கடைசி நிமிடத்தில் சந்திப்பை அதிரடியாக ரத்து செய்த முதல்வர் விஜய்.. பின்னணியில் நடந்த பகீர் டுவிஸ்ட்..!!

By Soundarya on ஆனி 28, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தமிழக முதல்வர் விஜயைச் சந்திப்பதற்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நடராஜன், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, சம்பத் மற்றும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம், இசக்கி சுப்பையா உள்ளிட்ட பலர் த.வெ.க-வில் இணைந்தனர். கட்சியில் இணைந்த பிறகும் முதல்வர் விஜயைச் சந்திக்க அவகாசம் கிடைக்காததால், த.வெ.க அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் பேசி இந்தச் சந்திப்பிற்கு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

முதல்வர் விஜயைச் சந்திக்கும் பெரும் எதிர்பார்ப்புடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு வந்திருந்தனர். இருப்பினும், பிரபல திரைப்பட இயக்குநர் பாக்யராஜின் திடீர் மறைவு காரணமாக இந்தச் சந்திப்பு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. மிக முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்பட்ட இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால், சென்னை வந்திருந்த முன்னாள் அமைச்சர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.