குஷியோ குஷி…! மகளிர் உரிமை தொகை உயரும்…! முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!

Spread the love

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  சென்னையில் உள்ள ‘வெல்லும் பெண்கள்’ நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தப் புதிய விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.

இதனால், இத்திட்டத்தின் மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இலவசத் திட்டங்களை எதிர்த்தவர்கள் கூட இப்போது தாங்கள் ஆளும் மாநிலங்களில் இவற்றைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

மேலும், தனது திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களுக்குக் கல்வி எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், பெண்களின் வளர்ச்சிக்காகவே புதுமைப் பெண் மற்றும் விடியல் பயணம் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறினார்.

பேச்சின் முடிவில், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும், மகளிர் உரிமைத் தொகையும் உயரும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதைச் சுட்டிக்காட்டி, திட்டப் பயனாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

7 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

7 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

7 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

7 மணத்தியாலங்கள் ago