BREAKING: முதல்வர் ஸ்டாலினின் 4 புதிய வாக்குறுதிகள்…. காலையிலேயே குட் நியூஸ்….!

By Nanthini on தை 16, 2026

Spread the love

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு (ஜனவரி 16, 2026), தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநில மக்களுக்கு நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார். ‘அஞ்சாமை, ஈகை, அறிவூக்கம், இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு’ எனும் வள்ளுவரின் வாக்கினை மேற்கோள் காட்டி, இந்த நான்கு பண்புகளே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். வறியோர் எளியோர் வாழ்வுயுர மனிதநேயத் திட்டங்கள். இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

   

2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே ‘உங்க கனவைச் சொல்லுங்கள்’ போன்ற புதிய திட்டங்கள் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளைக் கேட்டறிந்து வரும் அரசு, தற்போது இந்த நான்கு வாக்குறுதிகளின் மூலம் தனது எதிர்காலச் செயல்பாடுகளுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், தேர்தல் களத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் இந்த வாக்குறுதிகள் அமையப்பெற்றுள்ளன.