இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி இன்று தன்னுடைய நாற்பதி நான்காவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் எம்.எஸ். தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அழுத்தமான சூழ்நிலையையும் தன்னுடைய ஒவ்வொரு நகர்வின் மூலமாக கவிதையாக மாற்றியவர் தோனி.
கிரிக்கெட்டின் தனித்துவமிக்க ஒரு வீரரான மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பெருமை பிறப்பிலேயே வருவதில்லை. கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள் “என்று தெரிவித்துள்ளார்.
