திடீர் திருப்பம்… இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை… வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. இதனிடையே சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு எதிராக பல கேள்விகளை எழுப்பிய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் அமர்வுக்கு வந்த நிலையில் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த கட்டப் பணிகளை விஜய் செய்து வருகிறார். இந்நிலையில் அரசியல் கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக என் ஆர் இளங்கோவன் எம் பி, அதிகாரிகளுடன் நேற்று இரவு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.