பொதுவாகவே திருமண விழாக்கள் என்பது மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்க கூடியதாக இருக்கும். ஆனால் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த ஒரு அசாதாரண சம்பவம் இணையத்தில் வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், திருமண சடங்குகளின் நடுவில் மணமகள் திடீரென்று கண்களை மூடி தலையை சாய்த்து தூங்கும் காட்சி பதிவாகியுள்ளது.
அந்த தருணம் நிகழ்ச்சி இருந்தவர்களையும் இணைய பயனர்களையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. மணமகள் தூங்கியதை கவனித்த மனமகன் கோபப்படாமல் மென்மையாக அவரை எழுப்பி சிரித்துக் கொண்டே அருகில் இருந்தார். இந்த காட்சி அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன் பலருடைய இதயத்தையும் உருக்கியது. மணமகனின் அமைதியான அணுகுமுறை உண்மையான அன்பின் வெளிப்பாடு என்று இணையத்தில் பாராட்டப்படுகிறது. பலரும் நல்ல கணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
