“விஜய் ஆக்‌ஷன் மோட்..! பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிக்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!”

By Swetha on வைகாசி 16, 2026

Spread the love

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து, அதனை முழுமையாக ஒழிப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் முதலே விஜய் தீவிர நடடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, தற்போது கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் ஆணையர், துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பள்ளி மற்றும் கல்லூரிகள், மாணவர் விடுதிகள் மற்றும் கல்வி நிறுவனப் பேருந்துகளில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையைக் கண்டறிவதற்காக ரகசிய நெட்வொர்க் (Secret Network) ஒன்றை அமைக்கவும், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

   

அரசு அனுமதித்த நேரங்களான நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவும், சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய நடமாட்டத்தைத் தடுக்கவும் இந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு போதை பழக்கமே முக்கியக் காரணம் என்பதால், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய அரசு இந்தத் தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.