ஜெயலலிதா பாணியில் ஒரு வேட்டை…!! லஞ்ச வீடியோவால் சிக்கிய தவெக கருப்பு ஆடு… உளவுத்துறை ரிப்போர்ட் வந்ததும் நள்ளிரவில் பறந்த உத்தரவு…!!

Spread the love

மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீராசாமி என்பவர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் விஜய், உளவுத்துறை அதிகாரிகள் மூலம் புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொண்டார். அதன் பின்னர், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த அந்த ஊராட்சித் தலைவரை, எவ்வித இழுபறியுமின்றி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா அளித்த நேர்காணலில், இந்த விவகாரத்தைப் பண்டைக்கால பங்காரு லட்சுமணன் லஞ்ச விவகாரத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். மற்ற அரசியல் கட்சிகளைப் போலக் கடமைக்குக் தற்காலிக நீக்கம் செய்யாமல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாணியில் மிகக் கடுமையான முடிவை விஜய் எடுத்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். மேலும், மக்கள் இந்த ஆட்சியில் முதலமைச்சரின் பிம்பத்தை மட்டுமே நம்பி வாக்களித்துள்ளதால், அவரைச் சுற்றியுள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களின் முறைகேடுகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அதிரடி நீக்கம் தவறு செய்ய நினைக்கும் மற்ற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

17 seconds ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

13 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

33 minutes ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

1 மணத்தியாலம் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

1 மணத்தியாலம் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

1 மணத்தியாலம் ago