தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் திரிஷா, அர்ஜுன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இதனிடையே சமீபத்தில் இந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடல் நா ரெடி தான் வரவா வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் 3 வருடங்கள் சினிமாவிற்கு இடைவெளி எடுக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

அதே சமயம் சமீபத்தில் தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளை சந்தித்து விஜய் சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட விஜய் அரசியலுக்கு வருவது 50 சதவீதம் உறுதியாகி உள்ள நிலையில் இணையத்தில் இது குறித்த செய்திகள் அடிக்கடி உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பாண்டிச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் விஜய் ஓடிய ஒரு காட்சி வைரலாகி வர உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து cheyyar balu வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
