மலேசியாவில் கேஜிஎப் லுக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் யாஷ்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..

By Archana on ஆடி 10, 2023

Spread the love

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார்.

   

பிறகு கன்னடத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

   

 

இருந்தாலும் இவரை நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி மாபெரும் சாதனையை படைத்தது.

இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியானது. இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார்.

தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக பலம் வருகிறார் நடிகர் யாஷ். இதனிடையே இவர் நடிகை ராதிகா பண்டிட்டு என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தற்போது யாஷ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎப் 3 பாகத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் யாஸ் மலேசியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

கே ஜி எஃப் லுக்கில் ரசிகர்கள் சூழ கோலாலம்பூரில் உள்ள உயர்ரக நகை விற்பனையக திறப்பு விழாவிற்கு விருந்தினராக சென்றுள்ளார்.

மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே ஸ்டைலாக வந்த அவரை ரசிகர்கள் ராக்கி பாய் ராக்கி பாய் என கூச்சலிட்டு கத்தினர்.

அதே சமயம் அவருடன் புகைப்படம் எடுத்தும் ஆட்டோகிராப் எடுத்தும் ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

விற்பனையகத்தை திறந்து வைத்த பிறகு ரசிகர்களுடன் யாஷ் உரையாடினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகின்றது.