நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி படத்தின் டைரக்டர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கிறார். எஸ்கே 26 இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அமரன் படத்துக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தை கமல் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 26வது படத்திற்கு சேயோன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சேயோன் என்றால் முருகக் கடவுள் என்று அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இது கிராமத்து கதையில் காமெடி காதல் சென்டிமெண்ட் கலந்த ஒரு கதைக் களத்தில் உருவாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
