actor harish kalyan

புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவிய இளம் நடிகர் ஹரீஷ் கல்யாண்… குவியும் பாராட்டு!

By Elango on மாசி 17, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் ஹரீஷ் கல்யாண். பார்க்கிங் லப்பர் பந்து உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரவரம் தனியார் புற்றுநோய் மருத்துவமனைக்கு மார்பக புற்றுநோய் குறித்து முன்கூட்டியே கண்டறியும் மருத்துவ கருவியை நடிகர் ஹரீஷ் கல்யாண் இலவசமாக வழங்கியுள்ளார்.

தனது அம்மாவின் பிறந்த நாளில் இதை வழங்கியதாக கூறிய நடிகர் ஹரீஷ் கல்யாண் மேலும் கூறுகையில், ஒருவர் கொடுத்த ஒரு கிஃப்டை பிரிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த மருத்துவ கருவி கிஃப்டை பிரிக்கும் போது இது பலருக்கும் உதவப் போகிறது என்ற எண்ணமே எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது. கிராமப்புறங்களில் இதுபோன்ற பரிசோதனைகள் பெண்களுக்கு அதிகளவில் செய்யப்பட வேண்டும் என்று நடிகர் ஹரீஷ் கல்யாண் அந்த மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.