ஜோதிட கணக்கின்படி செவ்வாய் பகவான் ஒவ்வொரு ராசியிலும் சராசரியாக 45 நாட்கள் தங்கி இருப்பார். ஆற்றல், தைரியம், உறுதி, துணிவு மற்றும் செயல்பாட்டின் அதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி தனது சொந்த ராசியான விருச்சிகத்தில் இருந்து குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார். அடுத்த ஜனவரி 16ஆம் தேதி வரை தனுசு ராசியில் தான் இருப்பார். செவ்வாய் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு சிறப்பு அதிர்ஷ்டமும் சாதக பலன்களும் தந்து பயனளிக்கும். எந்தெந்த ராசிகள் அந்த பலனை பெறப்போகின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியில் செவ்வாய் பகவான் ஒன்பதாவது வீடான பாக்கியஸ்தானத்தில் அமர்கின்றார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறந்து இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். உயர் கல்விக்கான முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களை பணி நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு செவ்வாய் பகவான் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். இதனால் நிதி முதலீடுகளில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியாற்றும் இடத்தில் தலைமை பண்புகள் வெளிக்காட்டுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்கு செவ்வாய் பகவான் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தைரியமும் ஆற்றலும் பல மடங்கு அதிகரிக்கும். துணிச்சலாக செயல்பட்டு வந்த ஒரு செயலையும் உடனுக்குடன் முடித்து வெற்றியை வசப்படுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியாற்றும் இடத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்:
இந்த ராசிக்காரர்கள் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடையக்கூடிய காலமாக இருக்கும். முன்னதாக செய்திருந்த முதலீடுகளிலிருந்து சிறந்த லாபம் கிடைக்கும். நிதிநிலைமை கணிசமாக மேம்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைப்பதோடு வணிகத்தை விரிவாகும் சந்தர்ப்பங்களும் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசிக்கு பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கின்றார். எனவே இது தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். உங்களுடைய பணி மற்றும் அதிகார பலன் அதிகரிக்கும். பணி காரணமாக விரும்பிய இடமாற்றம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பால் அனைத்து வேலைகளும் வெற்றி பெறும்.
