நம் உடலுக்கு தேவையான பலவிதமான சத்துக்களையும் தாதுக்களையும் வழங்கக்கூடிய தேனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். பொதுவாகவே தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்திருப்பதால் இனிப்பு சுவையை கொண்ட தேனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடலாம். அதிகமான சத்துக்களை கொண்டதுடன் எண்ணற்ற நன்மைகளையும் வழங்குகின்றது. தேன் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. உடலை ஆற்றலுடன் வைத்திருக்கவும் உதவுகிறது. சர்க்கரைக்கு பதிலாக தேநீர், ஸ்மூத்தி, சாலட் ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம். தினமும் காலையில் சுடுதண்ணீரில் தேன் கலந்து குடிப்பது ஆரோக்கியமாகும்.
தொண்டை வலி மற்றும் இருமல் மட்டுமல்லாமல் தீக்காயங்களை ஆற்றவும் இதை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தேன் உதவுகின்றது. அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவத்திலும் தேனை அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். தேனை சரும அழகுக்கும் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். தேனை முகத்தில் தேய்த்து வந்தால் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். தேனை தினம் தோறும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதுடன் அதீத பலமும் கிடைக்கும். மிக அழகான தோற்றத்தையும் பெறலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
தேனீர் அல்லது காபி குடிக்கும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு தேன் எடுத்துக் கொள்வதை விட வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வெறும் வயிற்றில் தேன் எடுத்துக் கொள்வது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் செரிமானத்தையும் மேம்படுத்தும். மேலும் நச்சுக்களை நீக்கவும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தேனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காண முடியும்.
