ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் அனைத்து அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு அதிரடி ஆட்டக்காரர்களை தட்டி தூக்கினர். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் முதலில் அமைதி ஏலத்தில் பின்னர் அதிரடியாக செயல்பட்டு அடுத்தடுத்து வீரர்களை வாங்கி குவித்தது. ஏலத்தின் முதல் பாதையில் சிஎஸ்கே அணி வீரர்களை வாங்க முயற்சி செய்தாலும் விலை அதிகமாக சென்றதும் அப்படியே பின்வாங்கியது.

இதன் காரணமாக சிராஜ் மற்றும் சமி போன்ற வீரர்கள் கிடைக்காமல் போனார்கள். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. பிறகு சென்னை அணி ஏலத்தின் பிற்பகுதியில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து ஆட்டக்காரர்களை வாங்கியது. அதன்படி ரச்சின் ரவீந்தரா ஒரு ஆல் ரவுண்டர் என்பதால் அவரை சிஎஸ்கே அணி விடுவிக்க விரும்பவில்லை. அதனால் அவரை வாங்க கடுமையாக போராடிய நிலையில் ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 20 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை வாங்க முயற்சித்தது.

அப்போது சிஎஸ்கே அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் தன்னிடம் இருந்த ஆர் டி எம் கார்டை பயன்படுத்தி அவரை வாங்கியது. அதன்படி சுவாரசியமான பின்னணிக்கு பிறகு சிஎஸ்கே அணியில் அஷ்வின், விஜய் சங்கர் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அதன்படி 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்கள் பட்டியலை இதில் பார்க்கலாம்.
1. டெவோன் கான்வே – 6.25 கோடி
2. எம் எஸ் தோனி – 4 கோடி
3. ருத்ராஜ் கெய்க்வாட் – 18 கோடி
4. ரவீந்திர ஜடேஜா – 18 கோடி
5. மதீஷா பதிரனா – 13 கோடி
6. சிவம் துபே – 12 கோடி
7. நூர் அகமது – 10 கோடி
8. ரவிச்சந்திரன் அஸ்வின் – 9.75 கோடி
9. கலீல் அகமது – 4.80 கோடி
10. ரச்சின் ரவீந்தரா – 4 கோடி
11. ராகுல் திரிபாதி – 3.40 கோடி
2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தக்க வைத்த வீரர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் இருவரும் தான் அதிக விலகி ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
