உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?.. குறைந்த முதலீட்டில் 71 லட்சம் வரை வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான திட்டம்..!

By Nanthini on கார்த்திகை 25, 2024

Spread the love

இந்தியாவில் பெண்களின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெண் குழந்தைகளுக்கான சிறந்த திட்டமாக சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற பெயரில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்காக சேமிப்பதற்கு வழிவகை செய்கின்றது. பெண் குழந்தைகளுக்கான சிறந்த தேர்வாக இந்த திட்டம் உள்ளது. உங்கள் வீட்டிலும் பெண் குழந்தைகள் இருந்தால் நீங்கள் உடனே இந்த திட்டத்தில் இணைந்து டெபாசிட் செய்யலாம். தங்களுடைய பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பெற்றோர்கள் இந்த திட்டத்தின் மூலம் சேமித்து வைக்க முடியும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா.. திட்டத்தில் எப்படி சேர்வது? வயது வரம்பு என்ன?  வட்டி விகிதம் என்ன? - முழு விவரம்!

   

பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் பெண் குழந்தை பிறந்து பத்து வருடங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் டெபாசிட் செய்யலாம். இதில் ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகின்றது. அரசின் மற்ற திட்டங்களை விட இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வட்டி விகிதமும் அதிகம் தான். இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தவறாமல் டெபாசிட் செய்து வந்தால் 71 லட்சத்திற்கும் அதிகமாக இந்த திட்டத்தில் ஒருவரால் பெற முடியும்.

   

பெண் குழந்தைகளுக்கு அசத்தலான சேமிப்பு திட்டம்! ரூ.250 முதலீட்டில் ரூ.67  லட்சம்! | In sukanya samriti yojana if you open an account with 250 rupees  and invest you can get a return of 67 lakh

 

15 வருடங்கள் முதலீடு செய்து 6 ஆண்டுகள் எந்தவித டெபாசிட் செய்யாமல் இருக்கும்போது கூட்டு வட்டியின் மூலம் வட்டி வருமானமாக கிடைக்கும். இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளுக்காக இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். தபால் அலுவலகத்திலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். குழந்தை பிறந்ததில் இருந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது 21 வயதாகும்போது தொகையை முழுவதுமாக பெற்றுக் கொள்ள முடியும்.

Sukanya Samriddhi Yojana And Mahila Samman Savings Certificate: Know All  About These 2 Post Office Schemes

ஆனால் நீங்கள் வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே டெபாசிட் செய்தால் போதும். இந்த திட்டத்தில் பெண் குழந்தை 18 வயதை அடையும்போது கல்வி செலவுக்காக முதலீடு செய்த தொகையிலிருந்து பாதியை எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. எனவே உங்கள் வீட்டு குழந்தைகளும் இந்த திட்டத்தில் பயனடைய விரும்பினால் உடனே இதில் முதலீடு செய்யுங்கள்.