இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாகன ஓட்டிகளை குறிவைத்து புதுவித மோசடி ஒன்று நடைபெற்று வருவதாக சென்னை மாநகரப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது சென்னை பெருநகர காவல் துறையின் (GCTP) லோபோவை பயன்படுத்தி மோசடியான whatsapp செய்திகள் பரவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த whatsapp செய்திகளில் போக்குவரத்து சலான் போல குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும் அந்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ள காவல் துறை இது போன்ற செய்திகளை பெற்றால் உடனடியாக புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே உங்களுடைய போனுக்கு இது போன்ற ஏதாவது குறுஞ்செய்தி வந்தால் அதனை கிளிக் செய்யாமல் உடனே காவல் நிலையத்தில் புகார் அளிப்பதுதான் நல்லது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…