நல்லா இருக்க மனுஷனைக் கூட காதல் இப்படி எல்லாம் பண்ண வைக்குமா?… திருடனாக மாறிய எலக்ட்ரீசியன்.. திடுக்கிடும் தகவல்…!

Spread the love

சென்னை ஜமீன் பல்லாவரம் எம். ஜி .ஆர் தெருவை சேர்ந்தவர் கலைவாணி(50). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவனை இழந்த இவர் முடிச்சூரில் உள்ள பிரபல தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 30 -ஆம் தேதி இரவு வணக்கம் போல் பணி முடிந்ததும், அவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். இப்போது அவரை யாரோ ஒரு மர்ம நபர் பின்தொடர்ந்து வந்து கண் இமைக்கும் நேரத்தில் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு ஓட்டப்பிடித்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் திருடனை வலை வீசி தேடி வந்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் கொள்ளையன் பல்சர் பைக்கில் வந்து சென்றுள்ளதும் பைக்கின் நம்பரும் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கிளச்சிரா பட்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ்(23) என்பது தெரியவந்தது . பல்லாவரத்தில் பதுங்கி இருந்த அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னர் அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விக்னேஷ் ஆரம்பத்தில் திருவண்ணாமலை வட்டார பகுதியில் உள்ள வீடுகளுக்கு எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் வேலைகளை பார்த்து வந்துள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. அதனால் அவரை திருமணம் செய்யும் நோக்கத்தோடு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜிமீன் பல்லாவரம் சுபம் நகர் பகுதிக்கு அழைத்து வந்து தனி வீடு எடுத்து இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது காதலி குரோம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல ஜவுளி கடையில் வேலை செய்துள்ளார். விக்னேஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாக ஊரைச் சுற்றி வந்துள்ளார். இதனை காதலி பலமுறை கண்டித்தும் அவன் திருந்தாததால் இனிமேல் நீ வீட்டுக்கு வராதே என்று வீட்டை விட்டு துரத்தி உள்ளார். அதனால் விக்னேஷ் பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளான் . சம்பவத்தன்று கால் சென்டர் ஊழியரான கலைவாணியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு உள்ளான். அவனிடமிருந்து செயின் பறிமுதல் செய்துவிட்டு அவனை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆதர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Divyamayakannan

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

5 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

12 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

24 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

56 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago