இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் போன் நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் பின்னால் ரூபாய் நோட்டு மற்றும் ஏ.டி .எம் அட்டைகளை வைப்பது பழக்கமாக கொண்டுள்ளனர் . இந்தப் பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1.அதிக வெப்பம் அடைதல்:
ஸ்மார்ட் போன்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது, கேம் விளையாடும்போது, வீடியோ பார்க்கும்போது, நீண்ட நேரம் சார்ஜ் போடும்போது அதிகம் வெப்பமடையும். ஸ்மார்ட்போன் கவருக்கு பின்னால் பணம் அல்லது அட்டை வைக்கும் போது வெப்பம் வெளியேறுவது தடுக்கப்பட்டு வெப்பநிலை அதிகரிக்கும். வெப்பம் அதிகரித்தால் பேட்டரி வீக்கம், செயலிழப்பு அல்லது வெடிப்பு போன்ற அபாயங்கள் ஏற்படலாம். ரூபாய் நோட்டுகளில் காகிதம் மற்றும் ரசாயனங்கள் கலந்திருப்பதால் அவை எளிதில் தீப்பற்ற கூடியவை. அது வெப்பமான ஸ்மார்ட் போன் உடன் தொடர்பு கொள்ளும் போது தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2.காந்தபுலத்தின் பாதிப்பு:
மொபைலில் உள்ள ஸ்பீக்கர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம், காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இது பேக் கவரில் வைக்கப்பட்டிருக்கும் ஏ.டி.எம், கிரெடிட் கார்டுகள் அல்லது பிற காந்த ஸ்ட்ரிப் கொண்ட அட்டைகள் காந்த புலத்தால் பாதிக்கப்பட்டு தகவல்கள் சிதைக்கப்பட்டு அவை பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்லக்கூடும்.
3.இழப்பு அபாயம்:
ஸ்மார்ட்போனை தவற விடும்போது அதோடு சேர்த்து கவருக்கு பின்னால் இருக்கும் பணமும் அட்டையும் திருடப்பட வாய்ப்புள்ளது. இதனால் இரட்டை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஸ்மார்ட் போன் கவருக்கு பின்னால் பணம் மற்றும் அட்டைகளை வைப்பதை தவிர்த்து விட்டு அதை பாதுகாப்பாக தனி பையை பயன்படுத்துவது சிறந்தது .
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…