அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும் தமிழக முதல்வர் விஜய் ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், இதுவரை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தை, இனி வரும் காலங்களில் 9-ம் வகுப்பு முதலே தொடங்கி வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் தங்களின் பள்ளிப் படிப்பை எவ்வித தடையுமின்றி தொடர முடியும் என்றும், மாணவர்களின் இடைநிற்றல் பெருமளவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் நகர்ப்புற மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் ‘மினி பூங்காக்கள்’ அமைக்கவும், உள்ளாட்சி அமைப்புகளில் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களை விரைந்து விரிவுபடுத்தி பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கலெக்டர்களுக்கு முதல்வர் விஜய் மிகக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
