மூத்த நிர்வாகிகளுக்கு செக்…. 110 மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் தயார்…. ஸ்டாலினின் பிக் மாஸ்டர் பிளான்….!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

திமுக உள்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், தனது நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தி மறுசீரமைக்க முடிவெடுத்துள்ளது. நிர்வாக வசதிக்காக இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய 110 மாவட்டங்களுக்கான எல்லைப் பட்டியலைத் திமுக தலைமை தயார் செய்து வருகிறது. விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த மாவட்டப் பட்டியலையும் பொறுப்பாளர்களையும் முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மறுசீரமைப்பில் இளைஞர்களுக்கும் மகளிர்களுக்கும் அதிக வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிர்வாகிகளுக்கு வயது உச்சவரம்பும் (மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயது) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அமைப்புகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, 16-ஆவது உள்கட்சித் தேர்தலை நடத்தும் பணிகளும் முடுக்கிவிடப்படவுள்ளன.