காலையிலேயே குட் நியூஸ்… மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு புதிய நடைமுறை… தமிழக மின்வாரியம் அறிவிப்பு.. !

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

தமிழகத்தில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால் வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இனி முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெரும் படிவம் இரண்டை நுகர்வோர் இடமிருந்து பெற தேவையில்லை என மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே நேரம் விற்பனை, பங்கு பிரித்தல் மற்றும் பரிசளித்தல் போன்றவற்றில் விற்பனை பத்திரம், சொத்துவரி ரசீது மற்றும் ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.