Connect with us

Tamizhanmedia.net

வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கிய சந்திரயான் 3.. வாழ்த்து தெரிவித்து திரை பிரபலங்கள் போட்ட பதிவு.. வைரல்..!!

CINEMA

வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கிய சந்திரயான் 3.. வாழ்த்து தெரிவித்து திரை பிரபலங்கள் போட்ட பதிவு.. வைரல்..!!

சந்திரயான் 3 விண்கலம் நேற்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கியது. இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  இதன் மூலமாக நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் அனைவரும் பெருமையோடு இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பதிவுகளை இதில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், எனது டிபி யில் இந்த படம் இருக்கும். ஒரு இந்தியனாக இந்த படம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் என்றென்றும் பதிந்து இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

 

முன்னணி நடிகரான மாதவன் இந்த சாதனையை விவரிக்க வார்த்தைகளால் போதாது. ஜெய்ஹிந்த், என்னுடைய இதயம் பெருமிதம் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.

 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் வாழ்த்துக்கள் இஸ்ரோ விண்வெளி ஆய்வில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று இந்தியாவின் சாதனையை பாராட்டி ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

 

தெலுங்கு நடிகரான ரவி தேஜா வெளியிட்டுள்ள பதிவில், வாழ்த்துக்கள் இஸ்ரோ சந்திரயான் 3 இன் வெற்றிகரமான மென்மையான தரை இறக்கத்தின் மூலம் இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மற்றொரு புகழ்பெற்ற அத்தியாயத்தை எட்டியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

 

முன்னணி நடிகரான டி ராஜேந்தரின் மகனான நடிகர் சிம்பு, பெரிய வாழ்த்துக்கள் இஸ்ரோ நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த நாள் இந்தியனாக உள்ள ஒவ்வொருவருக்கும் வரலாற்று சிறப்புமிக்கது என பதிவிட்டுள்ளார்.

 

நடிகர் ஜெய், நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்திய நாட்டிற்கு பெற்றுத்தந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆனா ஷாருக்கான், அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் இந்தியாவை பெருமைப்படுத்திய ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் காஜல் அகர்வால், நமது தேசிய சின்னமான சாரா நாத்திலிருந்து அசோகரின் சிங்க தலைநகரான சந்திரன் மேற்பரப்பில் இஸ்ரோவுடன் இணைந்து அதன் அடையாளத்தை விட்டுச் செல்லும் என பதிவிட்டுள்ளார்.

 

முன்னணி நடிகரான மகேஷ்பாபு சந்திரனின் தென்துருவத்தை நோக்கி ஒரு வெற்றிப் பயணம், சந்திரயான் 3 நேர்த்தியான தரையிறக்கம் இந்தியாவின் அறிவியல் மேன்மைக்கும் விண்வெளி ஆய்வில் மாபெரும் பாய்ச்சலுக்கு ஒரு சான்று என பதிவிட்டுள்ளார்.

 

முன்னணி நடிகரான சூர்யா மிகவும் எளிமையான முறையில் சந்திரயான் 3 பெருமைப்பட வேண்டிய தருணம் என்று ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக பதிவை பகிர்ந்துள்ளார்.

 

நடிகர் ஜெயம் ரவி சந்திரயான் 3 தேச பெருமையின் கலங்கரை விளக்கத்துடன் இந்தியாவின் பிரபஞ்சம் முன்னேற்றங்களுக்கு நன்றி என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top