நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தார் நயன்தாரா. இவரது இயற்பெயர் டயானா மரியா குரியன் என்பதாகும். 2003 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமான நயன்தாரா பின்னர் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நயன்தாரா.

#image_title
தொடர்ந்து சிவகாசி கஜினி வல்லவன் யாரடி நீ மோகினி சத்யம் பாஸ் என்கிற பாஸ்கரன் ஏகன் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார் நயன்தாரா. 2010 காலகட்டத்திற்குப் பிறகு சினிமா கேரியரில் நல்ல ஒரு உயரத்தை எட்டினார் நயன்தாரா. ஹீரோவே இல்லாத ஹீரோயின் சப்ஜெக்ட் கொண்ட படங்களில் நடித்த நயன்தாரா கோலமாவு கோகிலா இமைக்கா நொடிகள் நெற்றிக்கண் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இதனால் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று மக்கள் அழைத்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமே சர்ச்சையாக தான் நடந்தது. பின்னர் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். தற்போது இவர்களது திருமண டாக்குமென்டரி நெட்பிலிக்சில் வெளியாவதற்கு முன்பு தனுஷை பற்றி குற்றச்சாட்டை வெளியிட்ட பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் இன்று வரை ஏதாவது ஒரு பேசுபொருளில் சிக்கிக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார் நயன்தாரா.

அதாவது பிரபல நடிகரும் இயக்குனருமான சித்ரா லக்ஷ்மணன் பேசுகையில், “நயன்தாராவின் கல்யாண சிடியில் அனுமதியின்றி சந்திரமுகி காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த உரிமைகளை வைத்திருப்பவர் நயன்தாராவிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த உரிமைகளை முன்பே பேசி வாங்கியிருந்தால் இந்த பிரச்சினை நயன்தாராவிற்கு வந்திருக்காது” என்று பேசியுள்ளார்.
