#image_title
சந்திரபாபு தமிழ் சினிமாவில் பணியாற்றிய தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மற்றும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர். சந்திரபாபு தூத்துக்குடியில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஜோசப் பிச்சை என்பதாகும். இவரை பாபு என்று செல்லமாக அழைப்பர். இவர் சந்திரகுல வம்சத்தில் பிறந்த காரணத்தினால் தமது பெயரை பின்னால் சந்திரபாபு என மாற்றி வைத்துக் கொண்டார்.
சந்திரபாபுவின் தந்தை ஜே பி ரோட்டரிஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர். அன்றைய பிரிட்டானிய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் சத்தியாகிரகம் இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 ஆம் ஆண்டு சந்திரபாபு குடும்பத்தினரை மொத்தமும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு கொழும்பில் தனது பள்ளி படிப்பை முடித்தார் சந்திரபாபு.
பின்னர் 1943 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி சென்னையில் ககுடியேறியது சந்திரபாபு குடும்பம். அங்கு சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்தனர். சந்திரபாபுவின் தந்தை தினமணி பத்திரிகையில் பணியாற்றினார். சிறுவயதிலிருந்தே பாடும் திறமையை பெற்றிருந்த சந்திரபாபு தனது 16ஆம் வயதில் இருந்தே திரையுலகில் ஆர்வம் கொண்டு அதில் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
ஒரு படப்பிடிப்பு தளத்தில் உள்ளே சென்று வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டவர் சந்திரபாபு. 1947 ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் சந்திரபாபு. தனது தனித்துவமான நடனம், பாடல் மற்றும் நகைச்சுவையினாலே விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார்.
1950 ஆம் ஆண்டுகளில் பெரும் நட்சத்திரமாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார் சந்திரபாபு. தனது நடிப்பிற்காகவும் நடனத்திற்காகவும் பாடும் திறமைக்காகவும் பிரத்தியேகமாக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் சந்திரபாபு. நகைச்சுவை நடிகர் ஆன சந்திரபாபுவின் தொழில் வாழ்க்கை உச்சத்தில் இருந்தாலும் அவரது சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்த பெண் சந்திரபாபு உடன் வாழாமல் வேறொருவரை விரும்புவதாக கூறியதால் அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவரது காதலனுடன் சேர்த்து வைத்தார் சந்திரபாபு.
இதனால் மனம் நொந்த சந்திரபாபு குடிக்கு அடிமையானார். 1960 ஆம் ஆண்டுகளில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகராக முன்னேற தொடங்கிய காலகட்டம் அதுவானதால் சந்திரபாபுவவின் மார்க்கெட் சினிமாவில் சரிந்தது. சந்திரபாபு தானே கதாநாயகனாக நடித்து தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதோடு அவரது திரை வாழ்க்கை இறுதி கட்டத்தை அடைந்தது. பின்னர் முழு நேரம் குடிக்கு அடிமையான சந்திரபாபு உடல் நலம் பெரிதாக பாதிக்கப்பட்டு நோய்வாய் பட்டு இருந்தார்.
சந்திரபாபு நோய்வாய் பட்டிருந்த காலகட்டத்தில் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்கு மூன்று வேலை சாப்பாடு கொடுத்து பராமரித்தவர் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் தான். மூன்று வேலையும் சந்திரபாபு வீடு தேடி அவருக்கு சாப்பாட்டை அனுப்பி வைத்து விடுவார் எம் எஸ் விஸ்வநாதன். அப்படி இல்லை என்றால் சந்திரபாபு எம்.எஸ் விஸ்வநாதன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்வார். எம் எஸ் விஸ்வநாதன் காலத்திற்குப் பிறகு தேங்காய் ஸ்ரீனிவாசனம் ஆர் எஸ் மனோகரனும் சந்திரபாபுவே பராமரித்து வந்துள்ளனர்.
அப்படி தான் இறக்கும் தருவாயில் படுக்கையில் இருந்த சந்திரபாபு தனது கடைசி ஆசையை தேங்காய் ஸ்ரீனிவாசனிடம் கூறியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நான் மிகவும் கஷ்டப்பட்டு சாப்பாட்டுக்கே இல்லாமல் இருக்கும்போது எனக்கு சாப்பாடு கொடுத்து என்னை பார்த்து கொண்டவர் எம் எஸ் விஸ்வநாதன் தான். அதனால நான் இறந்த பிறகு என்னுடைய சடலம் ஒரு இரண்டு நிமிடம் ஆவது எம் எஸ் விஸ்வநாதன் வீட்டிற்கு முன்பே வைத்துவிட்டு பிறகு எடுத்துச் செல்லுங்கள் என்று தனது கடைசி ஆசையை கூறியுள்ளார் சந்திரபாபு.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…