Categories: சினிமா

சரோஜாதேவி வாழ்வில் நடந்த துயரம்… MGR சொன்ன வார்த்தை… ஜெயலலிதா வாங்கிய சத்தியம்…

Spread the love

சரோஜாதேவி மைசூரில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை மைசூரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர். இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் சரோஜாதேவி. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் சரோஜாதேவி.

கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்த சரோஜாதேவி கன்னடத்தில் ‘அபிநய சரஸ்வதி’ மற்றும் தமிழில் ‘கன்னடத்துப் பைங்கிளி’ என்று அழைக்கப்படுபவர். இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி. மேலும் கன்னட சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

17 வயதில் 1955 ஆம் ஆண்டு சரோஜாதேவி கன்னடத்தில் முதலில் அறிமுகமானார். 1950 60களில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். சரோஜாதேவி 1958 ஆம் ஆண்டு நாடோடி மன்னன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி முன்னணி நடிகை ஆனார் சரோஜாதேவி.

1960 70களில் தமிழ் சினிமாவில் இரண்டாம் நடிகையாக நடித்துக் கொண்டிருந்த சரோஜாதேவி, அதே வேளையில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். 1955 முதல் 1984 வரை 29 ஆண்டுகளாக முன்னணி கதாநாயக நடித்த ஒரே இந்திய நடிகை சரோஜாதேவி தான்.

எம்ஜிஆர் உடன் நடித்து புகழ்பெற்ற நடிகைகள் சரோஜாதேவி மற்றும் ஜெயலலிதா. எம்ஜிஆர் உடன் சரோஜாதேவி இணைந்து நடித்து கிட்டத்தட்ட 25 படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதில் நாடோடி மன்னன், திருடாதே, தாய் சொல்லை தட்டாதே, படகோட்டி, ஆசைமுகம், நான் ஆணையிட்டால், பெற்றால் தான் பிள்ளையா, அரச கட்டளை, பெரிய இடத்துப் பெண், பணக்கார குடும்பம், எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா போன்ற படங்கள் அடங்கும்.

1967 ஆம் ஆண்டு சரோஜாதேவி ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் சற்று இறங்கு முகத்தை கண்ட சரோஜாதேவி, ஜெயலலிதா மற்றும் கே ஆர் விஜயா அவர்களின் வருகையால் முன்னணி கதாநாயகியாக இல்லாமல் இரண்டாவது நாயகியாக நடித்து வந்தார். ஆனால் அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் பலம் வந்தார். பின்னர் 1985 ஆம் ஆண்டு அவரது கணவர் நோய்வாய்ப்பட்ட பின்பு படப்பிடிப்பிலிருந்து விலகி இருந்தார் சரோஜாதேவி.

சரோஜாதேவியின் கணவர் 1986 ஆம் ஆண்டு காலமானார். அவர் காலமான பின்பு எம்ஜிஆர் தனது மனைவி ஜானகியுடன் சரோஜாதேவி அவர்களை பார்க்க சென்றார். அப்போது எம்ஜிஆர் நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறவங்க நீங்க நடிப்பை நிறுத்தக்கூடாது உங்கள் வாழ்வில் உங்கள் கணவர் காலமானது மிகப்பெரிய இழப்புதான். இந்த இழப்பிலிருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும் என்றால் மீண்டும் நீங்கள் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எம்ஜிஆர் அவர்களின் வார்த்தையை ஏற்றுக் கொண்ட சரோஜாதேவி தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். 1984க்கு முந்தைய கமிட்டான படங்களில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார் சரோஜாதேவி. லேடீஸ் டைலர் போன்ற திரைப்படங்களும் அவர் கணவர் இறப்பிற்குப் பிறகு நடித்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

சில காலத்திற்குப் பிறகு ஜெயலலிதா சரோஜாதேவியை சந்தித்தார். அவர் சரோஜாதேவியிடம் ஒரு சத்தியம் பெற்றுக் கொண்டார். அது என்னவென்றால், நீங்க ரொம்ப திறமையான நடிகை. உங்கள் படங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் நடித்த புதிய பறவை திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால நீங்க எப்பவுமே நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகை. இதே போல டாப் கதாபாத்திரங்களில் மட்டும்தான் நீங்க நடிக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டார் ஜெயலலிதா.

admin

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

8 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

9 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

9 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

11 மணத்தியாலங்கள் ago