“அரிய நோயால் அவதிப்படும் என் மகள்கள்” அரசு பங்களாவை காலி செய்யாததற்கு இதுவே காரணம்… உச்சநீதிமன்ற EX தலைமை நீதிபதி சந்திரசூட் உருக்கம்..!!

Spread the love

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் தான் சந்திர சூட். இவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு அரசு பங்களாவில் வசித்து  வருகிறார். இந்த நிலையில் கடந்த வருடம் இறுதியில்  நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அரசு பங்களாவிலேயே தற்போது வரை தங்கி வருகிறார். இதனால் உச்சநீதிமன்றம் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது. அதில் மே 31ஆம் தேதியோடு சந்திர சூட்டிற்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவில் வசிக்கும் அனுமதியானது முடிவடைந்து விட்டது. ஆனால் தற்போது வரை பங்களாவை விட்டு காலி செய்யவில்ல.

எனவே அவரை பங்களாவிலிருந்து வெளியேற வைக்க வேண்டும். அதன் பிறகு பங்களாவை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட் பேசுகையில், தன்னுடைய மகள்கள் மஹி மற்றும் பிரியங்கா ஆகிய இரண்டு பேருக்கும் நெமிலி மயோபதி என்னும் மரபணு பிரச்சினை உள்ளது. இது எலும்பு மற்றும் தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காக அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த குறைபாட்டால் அவர்களுக்கு தசை சிதைவு ஏற்பட்டு சுவாச அமைப்பை கடுமையாக பாதிக்க செய்துள்ளது. அவர்கள் இரண்டு பேரும் தினசரி பயிற்சி எடுத்து இருக்கிறார்கள்.

அவர்களின் வசதிக்கேற்ப இந்த பங்களா வடிவமைக்கப்பட்டது. குளியல் அறைகள் முதல் வீட்டில் உள்ள அனைத்தும் அவர்களுடைய நிலைமைக்கு ஏற்ப உள்ளது. அரசாங்கம்  வழங்கிய தற்காலிக தங்குமிடம் இரண்டு வருடமாக பயன்படுத்தாமல் இருப்பதால் தற்போது அதை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வீடு தயாரானதும் நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன். என்னுடைய மகள்கள் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் தற்போது அந்த வீட்டிலேயே இருக்கிறேன். அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்வதற்கு என்னுடைய மனைவி அவர்கள் பக்கத்திலேயே இருக்கிறார். நானும் என்னுடைய மகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“பகீர்!… டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்… மின்கம்பத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது… நொடிப் பொழுதில் தப்பிய 4 பேர்… தூத்துக்குடியில் பரபரப்பு”…!!!

திருச்சி விமான நிலையம் அருகிலுள்ள பசுமணிநகரைச் சேர்ந்த அசோக்குமார் (37), தனது குடும்பத்தினர் நால்வருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குப்…

38 seconds ago

“1000 கோடி சொத்து… அதிமுகவின் ரகசிய ஆயுதம்”… அடிச்சு தூக்கும் லீமா ரோஸ்?… பரபரக்கும் சர்வே ரிப்போர்ட்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதன் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் பார்வையும் திருச்சி மாவட்டத்தின்…

6 minutes ago

“எம்பிஏ படிச்ச நீ ஏன் இதைச் செய்ற…?” தரையைத் துடைத்த மனைவியின் காலில் விழுந்த கணவன்…! மனதை உலுக்கும் சம்பவம்…!!

மும்பையில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வறுமையையும், கணவன்-மனைவி இடையிலான உன்னதமான அன்பையும் இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியாக விவரிக்கிறது. மாதம்…

9 minutes ago

விஜய்யுடன் கைகோர்க்கும் காங்கிரஸ்?… ரகசியமாக நடந்த 70 தொகுதிகள் டீல்… கடைசி நேரத்தில் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்களால் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.…

11 minutes ago

“ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே அறிவாலயத்தில் ஆப்பு”… முகவர்களுக்கு ஸ்டாலின் போட்ட அந்த ‘சீக்ரெட்’ கண்டிஷன்…ஜூன் 4-ல் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்…!

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம், தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தமிழக அரசியலில் பெரும்…

16 minutes ago

“CSK ரசிகர்களுக்கு செம்ம குட் நியூஸ்… ஐபிஎல் டிக்கெட் இருந்தா போதும்.. இனி மெட்ரோ பயணம் ஃப்ரீ… ஐபிஎல் ரசிகர்களுக்கு மாஸ் அறிவிப்பு”…!!!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரசிகர்களின் வசதிக்காகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சி.எஸ்.கே…

17 minutes ago